GHSS Kaveripakkam
🎉நூற்றாண்டு விழா🎊

100 ஆண்டு கால மகத்தான கல்விச் சேவை!

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காவேரிப்பாக்கம்

நம் பள்ளி, நம் பெருமை!

1926 முதல் 2026 வரை, தலைமுறைகளை வடிவமைத்த ஒரு நூற்றாண்டைக் கொண்டாட இணையுங்கள்.

பிப்ரவரி 22, 2026Kaveripakkam
விழாவுக்கான நாள் எண்ணிக்கை
0
0
நாட்கள்
0
0
மணி
0
0
நிமிடங்கள்
0
0
விநாடிகள்
22.02.2026
Tamil Nadu Government Emblem

பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு

பழைய பள்ளி நினைவுகள்

நம் பள்ளிக்கால நினைவுகள் - விளையாட்டுகள், உணவுகள், கவிதைகள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள்

40 வருடம் பார்க்காத நண்பர்கள் பேச வைத்திருக்கிறது. இந்த நான்கு நாள் என் வயது 58 அல்ல - பதினொரு வயதில் இருந்து 17 வயதுக்குள் ஏதோ ஒரு வயதில் நான் உலவி கொண்டிருக்கிறேன்.

தமிழரசு

VRS சார், BR சார், V.Gopal சார், KNS சார் - இவர்கள் எல்லாம் பள்ளிக்கு தூண்களாகவும் மாணவர்களுக்கு ஏணிகளாகவும் இருந்தவர்கள்.

D. Karthikeyan (1985-86)

NCC மாஸ்டராக KNS அவர்கள் காக்கி உடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே தோற்றமளிப்பார் - நம் பள்ளியின் சூப்பர் ஸ்டார் அவர் தான்! NCC பயிற்சி முடிந்த பிறகு ஐயர் ஹோட்டலில் இருந்து வரும் சிற்றுண்டியின் மணம் - இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் வருகிறது.

D. Karthikeyan (1985-86)

அந்த காலத்தில் 3200 மாணவர்கள், 6 sections! திருவள்ளுவர் சிலை, பெரிய மணி - A.U. Sivaprakasam தலைமையில் சிறந்த பள்ளி!

Mohan (1965-72)

ஆயிரம் கிளிகள் கிளைகளில் அமரும் ஆலமரம் ஆனது நூறு ஆண்டுகள் - இது நாம் வாழும் வரம். காவேரிப்பாக்கத்தின் மையம் நம் பள்ளி தான் - இதில் என்ன ஐயம்?

பாலசுப்பிரமணியன் (1985)

எனது தந்தை வீ. கோபால் தமிழ் ஆசிரியர் மண்ணின் மைந்தர், காவேரிப்பாக்கத்திலேயே பிறந்து வளர்ந்து இதே பள்ளியில் ஆசிரியராக பல காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்!

கோ. ஸ்ரீனிவாச ராகவன் (1983-84)

HM சிவப்பிரகாசம் எங்களுக்கு ஆங்கிலம் ஆசிரியர். அவர் பார்வை மிகவும் கூர்மையானது. ஒருநாள் ஷேக்ஸ்பியரின் 4 வரிகளை பலகையில் எழுதி "இதை மனப்பாடம் செய்" என்றார் — நேரடியாக ஆங்கிலத்திலேயே கற்பிப்பார், கிராமப்புற பள்ளிக்கு மிகவும் முற்போக்கான முறை!

Alumni (1969-70 SSLC batch)

பள்ளி நாட்களில் குஜாலா குட்டி பெட்டியில் ஒரு பக்கம் பால்கோவா, மறுபக்கம் கமரகட் — ரோஜா பீஸ் பாக்ஸ்! ஒரு அணா கொடுத்தால் பால்கோவா, இரண்டு அணா கொடுத்தால் கமரகட் — அந்த சுவை இன்னும் நாக்கில் நிற்கிறது!

Alumni (WhatsApp Group)

"புல்கோட்டி விளையாடாதே" என்று அப்பா அம்மா திட்டுவார்கள் — இப்போது நூற்றாண்டு விழாவில் கில்லி தாண்டா விளையாட கொண்டு வாருங்கள் என்று அழைக்கிறார்கள்! காலம் மாறிவிட்டது!

Alumni (WhatsApp Group 3)

இன்னும் நினைவுகளைப் படிக்க அல்லது உங்கள் சொந்த நினைவுகளைப் பகிர

நினைவலைகளுக்குச் செல்க
February 22, 2026

வரலாற்றின் ஒரு பகுதியாக இருங்கள்

இந்த வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வரும் கொண்டாட்டத்தை தவறவிடாதீர்கள். ஆயிரக்கணக்கான முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களுடன் இணைய இப்போதே பதிவு செய்யுங்கள்.