நிகழ்ச்சி நிரல் மற்றும் நூற்றாண்டு விழா குழு
நூற்றாண்டு விழா நாளின் முழுமையான நிகழ்ச்சி நிரல். நினைவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாளில் எங்களுடன் இணையுங்கள்.
நாள் நிரல்
வரவேற்பு & பதிவு
முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவு. குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்களுக்கு பதிவு தேவையில்லை. பேட்ஜ் விநியோகம்.
பாரம்பரிய விளையாட்டுகள்
பம்பரம், கிட்டிப்புல், கோலி, பல்லாங்குழி, கபடி, டயர் வண்டி, நொண்டி ஆட்டம், கள்ளங்காய், அடுப்புலி ஆட்டம் மற்றும் கோணிப்பை ஓட்டம் போன்ற மனமகிழ் விளையாட்டுகள்.
சிலம்பம் & கராத்தே
மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் - பாரம்பரிய தமிழ் தற்காப்புக் கலையை வெளிப்படுத்துதல்.
உணவு இடைவேளை
பாரம்பரிய உணவகங்கள், இயற்கை உணவு, கம்மரக்கட்டு, குச்சி ஐஸ், ஊர் பிரியாணி கடைகள் மற்றும் பள்ளிக்கால நினைவுச் சிற்றுண்டிகள்.
அந்தாட்சரி & நிகழ்ச்சிகள்
இசை விளையாட்டுகள், மாணவர் திறமை நிகழ்ச்சிகள் மற்றும் பழைய பள்ளி நாட்களின் நினைவுகளை கொண்டு வரும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிகள்.
நாட்டியம்
பாரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் மூலம் நம் செழுமையான கலாச்சார மரபை கொண்டாடும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள்.
வெஸ்டர்ன் டான்ஸ்
மாணவர்கள் மற்றும் இளம் முன்னாள் மாணவர்களின் நவீன நடன நிகழ்ச்சிகள் (விழா குழு விதிகளுக்கு உட்பட்டு).
பட்டிமன்றம்
பாரம்பரிய தமிழ் பட்டிமன்ற நிகழ்ச்சி - நம் பள்ளியின் இலக்கிய கலாச்சாரம் மற்றும் பேச்சுத் திறனின் அடையாளம்.
சிறப்பு விருந்தினர் வருகை
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விழாவை சிறப்பிக்கிறார். வரவேற்பு விழா.
திறப்பு விழா
தமிழ் தாய் வாழ்த்து, திருவள்ளுவர் சிலை திறப்பு, நூற்றாண்டு கல்வெட்டு, தேசிய கொடி கம்பம் திறப்பு மற்றும் விழா மலர் வெளியீடு.
அஞ்சலி நிகழ்ச்சி
நம் வாழ்க்கையை வடிவமைத்த காலமான ஆசிரியர்களுக்கு மலர்த்தூவி அஞ்சலி. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் அங்கீகாரம்.
நிறைவு விழா
சிறப்பு விருந்தினர் பேருரை, நன்றி உரை மற்றும் தேசிய கீதம். அனைத்து பங்கேற்பாளர்களுடன் குழு புகைப்படம்.
நூற்றாண்டு விழா குழு
செயல் தலைவர்
திரு.தி.தமிழரசு
துணைத்தலைவர்-1
திருமதி.லதா நரசிம்மன்
பேரூராட்சி மன்ற தலைவர்
துணைத்தலைவர்-2
திருமதி.M.ராதா
SMC தலைவர்
செயல் செயலாளர்
திரு.J.திருமால் பாலாஜி
டிம்பார்ஸ்
கௌரவ உறுப்பினர்கள்
இடம் விவரங்கள்
அ.மே.நி.ப காவேரிப்பாக்கம் வளாகம்
மெயின் ரோடு, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு - 632508
நிகழ்வு தொடர்புகள்
முக்கியம்
நிரல் சிறிய மாற்றங்களுக்கு உட்பட்டது. பதிவுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக வரவும்.